உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? – பிக்பாஸ் தர்ஷன் உருக்கம்

233
darshan

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்ட தர்ஷன் அவருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென நேற்று வெளியேற்றப்பட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த்துக்கொண்டிருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது பிக்பாஸின் தவறான முடிவு என சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

நமக்கு பழக்கப்பட்டவர்களிடமிருந்து அன்பை பெறுவது இயல்பு. ஆனால், நாம் இதுவரை சந்திக்காதவர்களின் அன்பை பெறுவது ஒரு சிறந்த உணர்வு. இன்று என் வாழ்வில் மிகச்சிறப்பான நாள் ஆகும். என்னைப்பற்றிய தெரியாத ஏராளமானோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தங்களின் வீட்டில் ஒருவராக கருதி கடந்த 98 நாட்களாக எனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  இது என்ன சுற்றுலாத் தலமா? - லாஸ்லியாவை கண்டித்த கமல்ஹாசன் (வீடியோ)