தயாரிப்பாளரான டி இமான்

தயாரிப்பாளரான டி இமான்

ஒரு காலத்தில் கிருஷ்ணதாசி உள்ளிட்ட டிவி சீரியல்கள் மூலம் பிரபலமாகி அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் இமான். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட இமான் சிறப்பான பாடல்களை கொடுத்ததன் மூலம் முன்னணி இசையமைப்பாளரானார்.

இமான் தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள டி.இமான்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாக்கி உள்ளார். முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.