சைக்கிள் பெண்ணின் தந்தை உயிரிழப்பு

20

சைக்கிள் பெண்’ என்று அழைக்கப்பட்டவர் ஜோதி குமாரி இவருக்கு இந்த பெயர் வந்ததற்கு காரணம் உள்ளது

கடந்த வருடம் கொரோனா லாக்டவுன் நடந்தபோது தன் தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிமீ பயணம் செய்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர்தான் ஜோதி குமாரி.

புலம் பெயர்ந்த தொழிலாளியான ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் ஒரு சிறு விபத்தில் இ-ரிக்‌ஷா ஓட்ட முடியாமல் முடங்கிப் போனார். அதோடு அவர்கள் தங்கியிருந்த அறையின் உரிமையாளரும் வாடகை பாக்கிக்காக நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதால் சொந்த ஊருக்கே திரும்ப செல்ல முடிவெடுத்தனர்.

இந்நிலையில் தான் ஜோதி தன் தந்தையை சைக்கிளிலேயே வைத்து 1200 கிமீ கடினமான பயணம் செய்து பீகார் மாநிலத்திற்கு சென்று சேர்ந்தார். மே 10ம் தேதி ஆரம்பித்த இவர்களின் பயணம் மே 16ம் தேதி முடிந்தது.

இந்த செய்தி வைரல் ஆன நிலையில் அனைத்து ஊடகங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்தது

ஆனால் தற்போது அவர்களின் குடும்பத்தில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு இடியாக இறங்கியுள்ளது எனலாம்.

கடந்த திங்களன்று ஜோதிகுமாரியின் தந்தை மோகன் பாஸ்வான் பீகார் மாநிலத்தின்  தன் சொந்த ஊரில் மாரடைப்பு காரணமாக இறந்தார். மோகன் பாஸ்வான் உயிரிழக்க, குடும்பமே தற்போது சோகத்தில் தத்தளித்து வருகிறது.

பாருங்க:  சித்ராவின் கணவர் ஹேம்நாத் வேறு வழக்கில் கைது
Previous articleநடிகர் மாதவனின் பிறந்த நாள்
Next articleதியேட்டர்ல வெளியாகி இருந்தா- தனுஷின் டுவிட்