Entertainment
இருண்டகாலம் மீண்டும் ஆரம்பமா? யூ டியூபர் மாரிதாஸ்
தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் பல இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர் அதிகம் வெப்பநிலை வேறு பகலில் நிலவுவதால் மின் விசிறியை இயக்க முடியாமல் காற்று இல்லாமல் மிகவும் மக்கள் கஷ்டப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றும் மின்சாரத்தடை பல இடங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது,
மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 750 மெகாவாட் குறைந்ததாலேயே மின் தடை ஏற்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
இது குறித்து யூ டியூபர் மாரிதாஸ் கூறியிருப்பதாவது,
முதலமைச்சர் வீடு இருக்கும் ஏரியா, அமைச்சர்கள் வீடு இருக்கும் ஏரியா தவிரத் தமிழகத்தின் பிற பகுதிகளில் கடுமையான மின்வெட்டு ஆரம்பம். 2006-11 காலத்தில் தொழிற்சாலைகள் முதல் ஏழை எளிய மக்கள் வரை வெந்து நொந்துபோனோம். அந்த இருண்ட காலம் மீண்டும் ஆரம்பம்? என கூறியிருக்கிறார்.
