காதலியை பார்ப்பதற்காக ஊரையே இருளில் மூழ்கடித்த எலக்ட்ரீசியன்

காதலியை பார்ப்பதற்காக ஊரையே இருளில் மூழ்கடித்த எலக்ட்ரீசியன்

பீகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்தில் கனேஸ்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் இரவு 8 மணி ஆகி விட்டால் கரண்ட் கட் ஆகிவிடும். கடந்த சில மாதங்களாக 8 மணி ஆகி விட்டால் கரண்ட் கட் ஆனது. இதை மின்வெட்டு என்று நம்பி மக்களும் சும்மா இருந்து விட்டனர். 8 மணிவாக்கில் செல்லும் கரண்ட், சில மணி நேரத்தில் மீண்டும் வந்து விடுகிறது என்பதால் மக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இருப்பினும் தொடர்ந்து இப்படி நடந்து வந்ததால் , மின் சார ஆபிஸிலும், பக்கத்து ஊர்க்காரர்களிடம் விசாரித்ததில் கரண்ட் எல்லாம் போவதில்லை அப்படி எல்லாம் இல்லை என்ற விசயம் தெரிந்துள்ளது.

இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை பார்ப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார் என்ற தகவல் தெரிந்துள்ளது. இதனிடையே அந்த நபரை அந்த பெண்ணுக்கே பிடித்து திருமணம் செய்து வைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.