தமிழகத்தில் ஊரடங்கு மீறல், சுமார் ரூ.6 கோடி வசூல்!

725
Curfew Violation
Curfew Violation

கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, என்னதான் அரசு தரப்பு ஊரடங்கை பிறப்பித்தாலும் நம் மக்களில் சிலர் விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றி வரத்தான் செய்கிறார்கள். அதிலும், தமிழக அரசு குறிப்பாக அவசர பயணத்தை தவிர்த்து வெளியே சுற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தாலும் கூட நம்மில் சிலர் அதை காதில் வாங்கி கொள்வதில்லை என்பது வருத்தம்மளிக்கின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 4.60 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.88 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவித்துள்ளதாகவும், 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மீறல்லில் அபதாரமாக சுமார் ரூ.6.05 கோடி வரை வசூல் என தமிழக காவல்துரை தரப்பு தகவல் அளித்துள்ளது.

பாருங்க:  ஏப்ரல் 18 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்