கடலூரில் என்கவுன்டர் ரவுடி சுட்டுக்கொலை

10

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா என்ற வீரய்யன் நேற்று இரவு வீட்டு அருகே சில மர்மநபர்களால் சுற்றி வளைத்து கொடூரமாக கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இது விசயமாக  போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடலூர் குடுமியான் குப்பம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் குற்றவாளிகள் தப்பி ஓடினர். இதில் 7 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதில் கிருஷ்ணன் என்பவன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.இவனுக்கும் வீராவுக்கு முன்விரோதம் இருந்ததால் இக்கொலையை அரங்கேற்றியுள்ளான் இவன்.

கடலூரில் நடந்த என் கவுன்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஐஜி எழிலரசன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் தீபன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாருங்க:  பிரபாஸ், சைஃப் அலிகான் நடிக்கும் படத்தை எதிர்க்கும் ஹிந்து அமைப்புகள்