Connect with us

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பாராட்டு விழா- எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள்

Latest News

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பாராட்டு விழா- எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள்

சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். இவரது குடும்பம் சிக்கன் ஸ்டால் நடத்தி வருமானம் ஈட்டி வந்தது. நடராஜன் மிக கஷ்டப்பட்டு உள்ளூர் போட்டிகள் பலவற்றில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.

முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் பங்கேற்று அங்கு நடந்த போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை திணற வைத்தார்.

முதன் முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பும் நடராஜனை வரவேற்க நடராஜன் இருக்கும் பகுதியில் நிறைய வரவேற்பு தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டன.

அவர் இருந்த இடத்திற்கு அருகில் பாராட்டு விழாவுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரவல் காரணமாக பாராட்டு விழா நடத்தக்கூடாது என அங்கிருந்த மேடையை அகற்றினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாருங்க:  மோகன்லால் இயக்கத்தில் உருவாகும் படம்

More in Latest News

To Top