Latest News
கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை ஏன் – உயர்நீதிமன்றம் விளாசல்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டு காலமாகவே கிட்டத்தட்ட 60. 70களிலேயே கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம்.
ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு கிரிக்கெட் பார்ப்பது, தான் தீவிரமாக நேசிக்கும் கிரிக்கெட் வீரர் ஏதாவது ஒரு போட்டியில் சொதப்பி விட்டால் அவர் வீட்டிற்கு சென்று போராட்டம் நடத்துவது கல் எறிவது என இந்திய கிரிக்கெட்டில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற விளையாட்டுகளான ஹாக்கி போன்றவற்றில் இந்த முக்கியத்துவம் கிடையாது.
கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை மற்ற எந்த ஒரு விளையாட்டுக்கும் கொடுக்க மறுப்பது ஏன் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக காட்டமாக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
