திருச்சி, தூத்துக்குடியில் மட்டும் பட்டாசு வெடிக்க தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம்

இந்தியாவில் பெருவாரியான நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் வரும் நகரங்களில் திருச்சி தூத்துக்குடி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நகரங்களில் அதிக மாசு இருப்பதாகவும் பட்டாசு வெடித்தால் இன்னும் மாசு ஏற்பட்டு மக்களுக்கு நோய் நொடிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பட்டாசு தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் மக்களின் உடல்நலன் தான் முதலில் முக்கியம் எனவும் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, திருச்சி மக்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் பட்டாசுகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

மற்ற நகரங்களில் சூழலுக்கு ஏற்ப சம்பந்தப்பட நிர்வாகங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.