Latest News
கோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் கொரொனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இதனிடையே மாநில அரசு வழங்கும் இந்த ஊசிகள் செலுத்தப்படும் இடங்களில் உள்ள பேனர்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை என ஹெச்.ராஜா கூறி இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது,
கொரோனா தடுப்பூசி முழுமையாக மத்திய அரசு இலவசமாக தரும் சூழ்நிலையில் தடுப்பூசி முகாம்களில் அது ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி போல் பதாகை வைத்துள்ளது நேர்மையற்ற செயலாகும்.பாரதபிரதமரின் படமும் அது முழுமையாக மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டம் என்கிற விவரம் பதாகையில் இடம் பெற வேண்டும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி முழுமையாக மத்திய அரசு இலவசமாக தரும் சூழ்நிலையில் தடுப்பூசி முகாம்களில் அது ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி போல் பதாகை வைத்துள்ளது நேர்மையற்ற செயலாகும்.பாரதபிரதமரின் படமும் அது முழுமையாக மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டம் என்கிற விவரம் பதாகையில் இடம் பெற வேண்டும் pic.twitter.com/RUTtsfAJQ1
— H Raja (@HRajaBJP) September 14, 2021