கடந்த 2020, 2021 ம் வருடங்களில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்றால் உலகமே ஒரு மோசமான நிலையை சந்தித்தது. இந்த பெருந்தொற்றில் மாட்டாதவர் யாருமே இல்லை எனலாம்.
ஏழை, பணக்காரன் என எல்லாருமே இந்த பெருந்தொற்றில் மாட்டி சிலர் உயிர் பிழைத்தனர் சிலர் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து ராணியும் இந்த தொற்றில் மாட்டினார்.
கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் காணப்பட்டது. முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததும் தனது பணிக்கு திரும்ப தொடங்கினார்.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களுக்கு வீடியோ கால் வாயிலாக நன்றி தெரிவித்த ராணி இரண்டாம் எலிசபெத், தான் சிகிச்சை பெற்று வந்த இந்த மருத்துவமனையில் ராணி எலிசபெத் வார்டை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கோவிட் தாக்கம் தம்மை பலவீனப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.