தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

கடந்த வருடம் டிசம்பரில் கொரோனா என்ற வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவியது. அது சீனா முழுவதும் பரவிய நிலையில் பலரும் பாதிக்கப்பட்டனர். மெல்ல அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் இந்தியாவிலும் வெகு வேகமாக பரவியது.

கடந்த  மார்ச்23 முதல் இந்தியாவில் முதல் முறையாக 21 நாட்கள் லாக் டவுன் செய்யப்பட்டது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகம்.

அதிகமான பிரபலங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதற்கு மரணித்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு 6000 பாதிப்பு அளவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 1000 அளவில் வந்துள்ளது. அரியலூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்ப்பே இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே உள்ளன.