நாளை முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி

83

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்க்காக நீண்ட நாட்கள் தடுப்பூசி ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாகப் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் இடங்களில் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும், தடுப்பூசி போட்ட பிறகு மாற்று வழியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (16-ம் தேதி) தேசிய அளவில் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்த பிறகு தமிழகத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் இம்மாதம் 25-ம் தேதிவரை தடுப்பூசி பணி நடைபெற உள்ளது”.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
Previous articleவயது வித்தியாசம் எங்களுக்கு தடையல்ல- கணவர் பற்றி பிரியங்கா சோப்ரா
Next articleசாப்பிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன