கொரோனா கோவிட்-19 நாளுக்கு நாள் தனது வேட்டையை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக பொதுமக்களிடமும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 234 கொரோனா பாதித்தவர்களாக தமிழக அரசு கண்டறிந்தது. அதில் முக்கியமாக கொரோனா பாதிக்கப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக தற்போதைய நிலவரப்படி, மேலும் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இப்பொழுது தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 அதிகரித்துள்ளது.