வரும் ஜனவரி13 முதல் கொரோனா தடுப்பூசி

53

உலக அளவில் கடந்த 2019ம் வருடம் தொடங்கிய கொரோனா 2020ம் வருடத்தையே ஒரு புரட்டு புரட்டி விட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து கொண்டே இருக்க இதோ வருகிறது அதோ வருகிறது என ஒரு வழியாக தடுப்பூசி வந்தே விட்டது.

வரும் ஜனவரி 13ல் இருந்து கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

முதலில் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிவிப்பு!