Latest News
ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய அரசு வைத்த செக்
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின்போதே இந்த கொரோனாவில் இருந்து வெளிவருவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டு ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பூசி பல இந்தியர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் சீரம் நிறுவனத்தின் கோவி ஷீல்டும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு போதிய மதிப்பளிக்காமல் வெளிநாடுகள் செல்லும் இந்தியர்களை தனிமைப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்து வருகின்றன.
இதற்கு இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நீங்கள் இதுபோல இந்தியர்களை தனிமைப்படுத்தினால் நாங்களும் இங்கு வரும் ஐரோப்பியர்களை தனிமைப்படுத்துவோம் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.