Latest News
ஸ்விகி ஊழியரை அடித்த டிராபிக் போலீஸ் கைது
ஸ்விகி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர் நேற்று முன் தினம், கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெண் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற ஒரு பள்ளி வேனை துரத்தி சென்று அந்த டிரைவரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் சதீஷ் என்பவர், நாங்கள் தான் இருக்கோம்ல, நீ ஏன் அவரை கேள்வி கேட்குற என்று மோகனசுந்தரத்தை தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த மோகனசுந்தரம் கதறி அழுதார். ஸ்டேசனரி கடை வைத்திருந்த நாங்க கொரோனாவால் தொழில் நஷ்டத்தை சந்தித்ததால் இப்படி பார்ட் டைமாக ஸ்விகியில் வேலை பார்த்து வருகிறேன். என்னை ஏன் அடிச்சாங்கன்னு தெரியல, என நாக்கு தளுதளுத்த குரலில் கூறினார்.
இது பார்ப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது, இவற்றை கேள்விப்பட்ட கோவை கமிஷனர் பிரதீப்குமார் , மோகனசுந்தரத்தை அடித்த காவலர் சதீஷை நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் காவலர் சதீஷ் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
— Vick craz (@vick_craz) June 5, 2022