Latest News
நீதிமன்றத்தில் புகைப்படம் எடுத்தவர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது.
நேற்று லோக் அதாலத் இங்கு நடந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக வந்த காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த குமாரவேலு மற்றொரு வழக்கு விசாரணையை மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்.
நீதிமன்ற விதிமீறலில் ஈடுபட்டதாக குமாரவேலுவை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் செல்வி புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து குமாரவேலுவை கைது செய்தனர்.