கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று முதலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இப்போது அங்குள்ள கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே அரியலூரில் 20 பேருக்கும், கடலூரில் 9 பேருக்கும் இந்த மார்க்கெட்டில் வேலை செய்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு தமிழகம் முழுவதும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.