தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 33,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில், தமிழ்நாட்டில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323ஆக அதிகரித்துள்ளது. இந்த 161 பேரில் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. அங்கு கொரோனா எண்ணிக்கை 900 ஐ நெருங்கியுள்ளது.