Corona (Covid-19)
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்தது
கடந்த வருட இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே துவம்சம் செய்து விட்டது. பொருளாதார வீழ்ச்சி,லாக் டவுன், எங்கு பார்த்தாலும் கொரோனா மரணம், மகிழ்ச்சியை அளிக்க கூடிய வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், பார்க், பீச் திறக்காமல் இருப்பது மக்கள் தங்கள் கவலைகளை மறக்க எங்கும் சென்று உறவினர்கள் நண்பர்கள் யாரையும் சந்திக்க முடியாத நிலை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து வருகிறது.
மக்கள் இதனால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்துள்ளனர். எப்போது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என ஆவலாக உள்ளனர்.
உலக நாடுகள் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கினாலும் ரஷ்யாவே விரைவாக தடுப்பூசி கண்டுபிடித்ததாக அறிவித்தது. பல கட்ட சோதனைகளை செய்த ரஷ்யா, 3வது இறுதிக்கட்ட பரிசோதனையும் செய்துள்ளது.
மக்கள் கொரோனா தடுப்புக்கு ஆளாகமல் இருப்பதற்காக இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் தொடங்கி இருப்பதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.