Latest News
வன உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மிக அதிவேகமாக பரவி வரும் இந்த தொற்றுக்காக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மனிதர்கள் பலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இப்போது விலங்குகளுக்கும் செலுத்தப்பட இருக்கிறது.
முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவில் 6 பூங்காக்களில் இருக்கும் சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு 15 விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த ஒரு நிறுவனம் விலங்குகளுக்காக இந்த தடுப்பூசியை தயாரித்து உள்ளது.
28 நாட்கள் 2 டோஸ் செலுத்தப்பட்டு 2மாதங்கள் விலங்குகள் கண்காணிப்பில் வைக்கப்படும் என தெரிகிறது.
