Connect with us

Latest News

கொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மக்கள் போக போக இதன் விபரீதத்தை உணர தொடங்கினார்.

இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக 2020ல்  பரவிய கொரோனாவால் உலகளாவிய லாக் டவுன் ஏற்பட்டது இந்த வருடம் இந்தியாவில் கடுமையான முறையில் கொரோனா தொற்று பரவியது. தற்போது உருமாறிய கொரோனா இலங்கையில் பரவி சற்று ஓய்ந்திருக்கிறது.

இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மட்டும் 3வது அலையை உருவாக்கிட முடியாது இந்த பெருந்தொற்று கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இந்த வைரஸ் இருந்தாலும் இதை சாதாரணமாக கையாண்டு விட முடியும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் கூறியுள்ளார்.

பாருங்க:  ஸ்னீக் பீக்கை மட்டும் இவ்வளவு பேர் பார்த்திருக்காங்களா

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  வேக்ஸின் எடுத்துக்கொள்ளுங்கள் சிரஞ்சீவி கோரிக்கை
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  6 வயது சிறுமி பாலியல் கொலை- தேடப்பட்ட நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Continue Reading

Entertainment

எல்லா படங்களிலும் கலக்கும் கிங்ஸ்லி

சந்தானத்துடன் சில படங்களில் இணைந்து நடித்து  காமெடி செய்தவர் கிங்ஸ்லி. சூரி ஒரு ஸ்டைல் யோகிபாபு ஒரு ஸ்டைல் என்றால் இவரின் ஸ்டைல் வேற மாதிரி உள்ளது. இவரின் காமெடிகள் வித்தியாசமான ஸ்டைலில் உள்ளதால் சமீப காலமாக வரவேற்பு பெற்று வருகிறார்.

ரஜினி நடித்துள்ள அண்ணாத்தே படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்திலும் இவரின் காமெடி பெரிதும் பேசப்பட்டது.

இதனால் மற்ற காமெடி நடிகர்களை பின்னுக்கு தள்ளி இவர் விரைவில் முன்னேறி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

பாருங்க:  ஜோதிகாவின் பேச்சை டிவிஸ்ட் பண்ணுகிறார்கள் –சக நடிகை ஆதங்கம்!
Continue Reading

Trending