Corona patient running from hospital
Corona patient running from hospital

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி தப்பியோட்டம்! சிவகங்கையிலும் இதே பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

கொரொனா நோய் தொற்று, பல்வேறு நாட்டு மக்களிடம் தன் பலப்பரிட்ச்சையை எந்தவித தயவுதட்சினையின்றி ஆக்கரமித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் பல தங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியாவில், கொரொனா தொற்று சற்று குறைவாக காணப்பட்டாலும், சுமார் 2 மாதக்கால ஊரடங்கால் இங்கேயும் இதே நிலைதான்.

இதனால், இந்தியாவில் கொரொனா மருத்துவ பரிசோதனையை அனைத்து தரப்பு மக்களிடமும் மேற்கொள்ள இந்திய அரசாங்கம் பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுமே சுமார் 58 டெஸ்ட் லேப்கள் உள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு அதிவிரைவாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு மூம்மூரம் காட்டி வருகின்றது. தமிழக அரசு ஒருபுறம் கொரொனாவில் இருந்து மக்களை காப்பாற்ற பலவேறு முயற்சிகள் செய்தாலும், மற்றொருபுறம் நோயாளிகள் பலர், மருத்துவமனையில் இருந்து தப்பிக்கவும் முயல்கின்றனர். இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளி தப்பியோட்டம், அதனை தொடர்ந்து சிவகங்கையிலும் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து இதே பாணியில் தப்பியோடி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 43 வயது நபருக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார். நோயாளி வீடு அமைந்துள்ள சின்மயா நகர் பகுதியில் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

இதேப்போல், சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோடியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பயந்து ஓடும் பேருந்தில் இருந்து 19 பேர் தப்பியோடியுள்ளனர். இவ்வாறான எஸ்கேப் சம்பவங்கள் தமிழகத்தில் வாடிக்கையாகியுள்ளது.