தப்பியோடிய கொரோனா நோயாளி! அதிகாரிகளிடம் மிரட்டல்!

தப்பியோடிய கொரோனா நோயாளி! அதிகாரிகளிடம் மிரட்டல்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி மீண்டும் சிகிச்சைக்கு வராமல் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ நெருங்கி வருகிறது. அவர்களுக்கு ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னையில் அதிக நோயாளிகள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்,

இந்நிலையில் அந்த வார்டில் இருந்த புளியந்தோப்பை சேர்ந்த நோயாளி  தப்பித்த ஒருவர்  வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு சென்று அவரை அழைத்த போலீஸாரிடம் சிகிச்சைக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார். மேலும் தன்னை யாராது நெருங்கினால் கட்டிப்பிடித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். போலீஸார் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானமாகவில்லை. இதனால் இன்று காலை மருத்துவக் குழுவினர் மீண்டும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த நபர் சிகிச்சைக்கு வரமறுத்து முரண்டு பிடித்து வருகிறார்.