ஆறுதல் செய்தி- கொரோனா தொற்று குறைகிறது

11

கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த வருடம் பலரையும் கடுமையாக வாட்டியது. பலரது வாழ்வாதாரங்களை இழக்க செய்து பலரது தொழிலை பொருளாதாரத்தை இழக்க செய்து கோரதாண்டவம் ஆடியது பல உயிர்ப்பழிகளையும் கொரோனா ஏற்படுத்திய நிலையில் 2020 அக்டோபரில் இருந்து கொரோனா குறைய தொடங்கி சகஜ நிலைக்கு திரும்பியது. பின்பு மீண்டும் கடந்த 2021 மார்ச் முதல் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு சற்று அதிக உயிர்ப்பழிகள் ஏற்பட்டது.

இன்று வரை கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் ஒரு ஆறுதல் செய்தியாக இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மூன்று நாட்களாக குறைய தொடங்கியுள்ளது என செய்திகள் வர துவங்கியுள்ளது.

கடந்த வாரம் 4 லட்சத்தையும் மீறி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அது குறைய தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது தினசரி பாதிப்பு 3.5 லட்சம் தான் தினசரி பாதிப்பாக உள்ளது என செய்திகள் குறிப்பிடுகின்றன.

பாருங்க:  கோவில் கோவிலாக சிம்பு- இன்று மதுரையில்
Previous articleமனைவி ஐஸ்வர்யாவுக்காக பாடல் பாடிய தனுஷ்
Next articleபைசர் நிறுவனத்தின் மிகப்பெரும் உதவி