தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவியை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கன்னட நடிகர் சிரஞ்சீவி கடந்த மே மாதம் கடுமையான லாக் டவுன் காலத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் மேக்னா கர்ப்பமாக இருந்தார்
சிரஞ்சீவியின் நினைவாக அவரது புகைப்படத்தை வைத்து வளைகாப்பு எல்லாம் நடத்திக்கொண்டார் மேக்னா. கடந்த சில நாட்களுக்கு அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. சிரஞ்சீவியின் சகோதரர் வெள்ளியிலான தொட்டில் எல்லாம் பரிசளித்தார்.
இப்போது மேக்னா ராஜ்க்கும் அவரது புதிதாக பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.