Connect with us

70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு! ஊரடங்கு எதிரொலி!

Corona (Covid-19)

70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு! ஊரடங்கு எதிரொலி!

உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கின் தொடக்கத்தில் ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாட்டால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 4.7 கோடி பேர் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் அதிகளவிலான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திறன், ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

More in Corona (Covid-19)

To Top