சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் ரிலீஸ் ஆகலாம் அது தியேட்டரில் வருகிறதா ஓடிடியில் வருகிறதா என்றுதான் தெரியவில்லை.
இதற்கிடையே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக இயக்கும் படம் கொரோனா குமார்.
இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்துமே முடிந்து, நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த கதையைக் கேட்ட சிம்பு உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். முதலில் இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் மட்டுமே தயாரிப்பதாக இருந்தது. அவருடன் இப்போது வேல்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
விரைவில் இந்தப் படத்தின் இதர நடிகர்கள் ஒப்பந்தம் முடிந்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.