Tamil Flash News
பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா உயர வாய்ப்புள்ளது- அமைச்சர் மா.சுப்ரமணியன்
சமீபத்தில் கொரோனா பரவல் உலக நாடுகளில் கூடி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் கொரோனா பரவி வருகிறது. இதில் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால் கடந்த முறை போல் அல்லாமல் எந்த ஒரு பெரிய பாதிப்பையும் இந்த கொரோனா ஏற்படுத்தவில்லை.
இருப்பினும் கொரோனா குறித்த தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும், சுகாதாரத்துறை செயலாளரும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போது பொங்கலுக்காக மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் பல இடங்களில் மக்கள் ஒன்று கூடியிருக்க வாய்ப்புள்ள காரணத்தால்
பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது”
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.