Latest News
இறந்தவருக்கு கொரோனா ஊசி போட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்
ஆந்திராவில் இறந்த நபருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபூரை சேர்ந்த ஒரு நபர் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டதாக அவரது மகனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் சங்கடமும் கோபமும் அடைந்தனர். தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகள் தங்கள் கடமையை கவனமாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கொவின் இணையத்தில் பதிவு செய்தனர்.
ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி நிர்வாகம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.