கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சீரம் நிறுவனமும் பாரத்பயோடெக் நிறுவனமும் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்தது.
நேற்றிலிருந்து இந்த ஊசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். சிலர் சரியான முறையில் இந்த ஊசி தயாரிக்கப்படவில்லை சோதனை செய்யப்படவில்லை என ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இந்த குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
இந்த நிலையில் இது போல வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.