சென்னையில், ரயில்வேதுறையில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதி!

512

இந்தியாவில், கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தை பொருத்தவரை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். கொரொனா தொற்றில் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர். மேலும் சென்னை மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதி என்பதால், கொரொனா பரிசோதனை பெருமளவு மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை மும்முரம் காட்டி வருகின்றது.

இந்நிலையில், இன்று சென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சென்னை சென்ட்ரலில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 15க்கும் மேற்பட்டோருக்கு மற்றும் தமிழக ரயில்வே போலீசார் 20க்கும் மேற்பட்டோருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாருங்க:  தனுஷின் நானே வருவேன்
Previous articleசென்னையில் சவரனுக்கு ரூ.360க்கு அதிகரித்துள்ள தங்கம் விலை!
Next articleதமிழகத்தில் கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 19,000 நெருங்கியது!