கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆக உயர்வு!

217

தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா தொடர்பான செய்திகளை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அதன்படி இதுவரை தமிழகத்தில் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். ஆக தமிழகத்தில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 15ல் இருந்து 18 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தவர் மூவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன், நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய இருவருக்கும் மற்றும் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமர் மோடியின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மீறினால் பெரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

பாருங்க:  திருப்பதியில் பக்தர்களுக்கு சப்பாத்தி- புதிய மிஷின் வரவழைப்பு
Previous articleஇவர்களின் நிலைமை என்ன? மோடிக்கு கமல் கேள்வி!
Next articleஆர் ஆர் ஆர் படத்தின் சூப்பர் அப்டேட் – அதோடு கொஞ்சம் அறிவுரையும்!