தமிழகத்தில் நேற்று நாற்பது கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட நேரம் காத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நான்கு மருத்துவமனைகளில் சேர்த்து சுமார் 1700 படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 1,458 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மட்டுமின்றி கொரோனா அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் இருக்கும் சிலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களுக்கு இன்னும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ஒரு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 13 ஆம்புலன்ஸ்களில் 40 நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.