Tamil Flash News
கொரோனா தமிழகத்தில் குறைகிறது-சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில்கொரோனா தொற்று கடந்த வாரங்களில் தினமும் 36000 பேரை பாதித்தது. கடந்த வாரத்தின் கடைசி நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
36 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக கீழிறங்கி தற்போது 28 ஆயிரமாக குறைய தொடங்கி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. தொற்று குறைந்து வரும் நேரத்தில்தான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குரோம்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.