இந்தியாவில், கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசங்கம் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. அதன்படி, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது கிடைக்கும் சேவைகள் குறித்தும் தெளிவுப்படுத்திள்ளது. மக்கள் எப்போதும் போல வீட்டிலே இருக்குமாறு அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,437 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 38 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1204 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 15ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.
