உலக நாடுகளையே அச்சுறுத்தி, பின்பு இந்தியாவிலும் தன் அசுர வேட்டையை வேட்டையாட தொடங்கியுள்ளது, கொரொனா. கொரொனாவின் பிடியில் சிக்காமல் இருக்க, முன்னச்சரிக்கையாக இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. அத்துடன் தமிழக அரசு, வீட்டிலே இருங்க!! பாதுக்காப்பா இருங்க!! வெளியே வாராதிங்க!!! என்ற வாசகத்தை முன்மொழிந்தும் வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 106 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 12ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.
