Latest News
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை
வட மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மருத்துவ துறை உயரதிகாரிகள் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.