Corona (Covid-19)
உள்ளே போ – கொரொனா விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடி அசத்திய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி
144 தடை உத்தரவு இந்தியாவில் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்னிடையே கொரொனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை, வீடியோக்களை, மக்கள் இடையே விழிப்புணர்வு உண்டாக்க ஊடகங்கள் மூலம், சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவுப்படுத்தி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுக்கு கொரொனா குறித்த விழிப்புணர்வை வீடியோகள் முலம் பதிவிட்டு வருகின்றனர். இதன்படி, நடிகர் மீர்ச்சி சிவா, நடன இயக்குனர் சண்டி ஆகியோர் கொரொனா விழிப்புணர்வு வீடியோக்களை எற்கெனவே வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரொனா விழிப்புணர்வு பாடலுக்கு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார். பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினியின் உள்ளே போ உள்ளே போ வசனத்தை கொண்டு தொடங்கும் இந்த பாடலை, பாடகர்கள் வேல்முருகன், சிவானி, தீபக் பாட, தமிழக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதாராமு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ள வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.