இந்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த கொடிய நோய்க்கான மருந்து கண்டுபிடிப்புக்க பல்வேறு நாடுகள் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அரசுத்தரப்பு என்னதான் விழிப்புணர்வுகள் எச்சரிக்கைகள் மக்களிடம் அறிவித்திருந்தாலும், மக்கள் தங்கள் பிரபலங்கள் மூலம் அறிவதே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு பெரிய திரை நடிகர்கள் முதல் சின்னத்திரை நடிகர்கள் வரை நடிக்க வைத்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசு ஃபேமிலி என்ற குறும்படத்தை முன்னணி இந்திய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஃபேமிலி கொரோனா விழிப்புணர்வு குறும்படம் யார் யாரு நடிக்கிறாங்க பார்க்கலாமா? இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசப்பட்டுள்ளது. இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக்கின்றது.