கொரோனா வந்த ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு அளவில் மிக குறைந்த அளவாக 16தான் இருந்தது. பின்னர் தனியார் அமைப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியால் கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது . நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிகமாக கொரோனாவை பரப்பி விட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதனால் கொரோனா எண்ணிக்கை அதிகமாகி தினமும் 200 என்ற அடிப்படையில் தமிழக அளவில் பாதிப்புகள் காண்பிக்கப்பட்டது அந்த நேரத்திலேயே மக்கள் மிகுந்த மனச்சோர்வடைந்து விட்டனர். ஆனால் அதற்கும் மேலும் வரும் என்று மக்கள் அறிந்திருக்கவில்லை போக போக பாதிப்புகள் 6000த்தை தொட்டவுடன் மக்கள் மிகுந்த கலக்கமடைந்தனர்.200க்கே அதிர்ச்சியடைந்தவர்கள் தினசரி பாதிப்பு 6000 என்ற உடன் மிகுந்த வருத்தமடைந்தனர்.
உண்மையில் அரசின் சீரிய முயற்சியாலும் வழிகாட்டுதலாலும் சுகாதாரத்துறை, மாநகராட்சி,துப்புறவுப்பணியாளர்கள் என அனைவரும் சேர்ந்து எடுத்த அதிரடி நடவடிக்கைகளாலும் முன்னேற்பாடுகளாலும் 6000க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 393 ஆக குறைந்துள்ளது.
இதையும் குறைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை .