Published
1 year agoon
கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளது டில்லி அரசு.
டில்லியில் ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து டில்லி அரசு ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2ம் தேதி டில்லி அரசு அமலாக்க முகமையால் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்கள் மொத்தம் 5,066 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 45 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி அரசு அதிகாரிகள் கூறினர்.
ஜனவரி 1ம் தேதி டில்லி அரசாங்கத்தின் அமலாக்க நிறுவனம் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து சுமார் 99 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தொற்று பாதிப்பு விகிதம் 6.5 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது, 14 லட்சத்து 54 ஆயிரத்து121 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,397 ஆகவும், அவர்களில் 4,759 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்