விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியும் புகழும் செய்யும் காமெடிகள் ஏராளம். இதனால் இவர்களுக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பிரபலம் ஆகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமான புகழ் புதிதாக கார் வாங்கியுள்ளார். என் பரம்பரையிலேயே நான் தான் கார் முதலில் வாங்கியது என பெருமை பொங்க சமீபத்தில் அதை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம் புதிய காரை பார்த்து தான் ஓட்டி பார்த்ததுடன் காரில் வைக்க சொல்லி வெள்ளியிலான விநாயகர் சிலை ஒன்றை கொடுத்துள்ளார். உடனே வைக்கணும் என உத்தரவிட்டுள்ளார்.
புகழும் விநாயகரை காரில் உடனே வைத்து விட்டார்.