Connect with us

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Latest News

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து அடுத்த வாரம் நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி, சனிக்கிழமை , மற்றும் ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருகிறது.

அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால், கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டும், 15ம் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிற்காக அரசு விடுமுறையும், தொடர்ந்து 16,17 ஆகிய விடுமுறை தொடர்ந்து வருவதால், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி சித்ரா பவுர்ணமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயண தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை ஒட்டி 13ம் தேதி கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

பாருங்க:  பீஸ்டுக்கு பார்ட்டி கொடுத்த விஜய்
Continue Reading
You may also like...

More in Latest News

To Top