சென்னையில் தனிமைப்படுத்த மண்டலங்கள் மற்றும் தெருகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இயல்பு நிலையை நோக்கி நகரும் சென்னை.
தமிழகத்தில் கொரொனா பாதித்த மாவட்டங்களில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக பாதிக்கப்பட்ட பாதிகளை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுத்தி மற்றும் கிருமிநாசினி முலமும் சுத்தம் செய்தும் வருகின்றது சென்னை மாநகராட்சி. அதிகப்படசமாக திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம் போன்ற பகுதிகளில் கொரொனா தொற்று பரவலை தடுப்பதில் சுகாதாரத்துறைக்கு சற்று சவாலாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சென்னையில் தனிமைப்படுத்த மண்டலங்கள் மற்றும் தெருகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இதனால் கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு சென்னை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 635 ஆக இருந்த நிலையில் 517 தெருக்களில் கடந்த 14 நாட்களாக நோய் தொற்று கண்டறிப்படாததால், தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 98 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் 101 தெருக்கள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆக குறைந்துள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது.