திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கோரிக்கை விடுத்துள்ளர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்திகாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி “மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளோம். இதில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்து எங்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.