இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கி வரும் புதிய படம் பேய் மாமா. இந்த படத்தில் முதலில் வடிவேல் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. சில காரணங்களால் அது முடியாமல் போக இப்போது யோகிபாபு அந்த வேடத்தில் நடிக்கிறார்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் என்ன வச்சி காமெடி கீமெடி பண்னலையே என்ற பாடலை செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் பாடியுள்ளனர்.
காமெடியான இந்த பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இன்னும் அதிக பார்வையாளர்களை இப்பாடல் தொடவில்லை என்றாலும் விரைவில் இப்பாடல் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.