வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி நடிகர் மரணம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி நடிகர் மரணம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சூரியுடன் சேர்ந்து காமெடி செய்தவர் பவுன்ராஜ். அதிலும் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தை இழுத்து கடையையே காலி செய்யும் காமெடியில் நடித்தவர் இவர்.

இவர் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு நடிகர் சூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு சூரி கூறியுள்ளார்.